சீதையை கூட விட்டுவைக்காத சுயநலவாதிகள் தானே.. அயோத்தியில் பாஜகவுக்கு அடி - சாடிய ராமாயண நடிகர்!
நடிகர் சுனில் லஹ்ரி அயோத்தி மக்களை கடுமையாகச் சாடியுள்ளார்.
பாஜக தோல்வி
கடந்த இரண்டு முறை உபி-இல் பாஜக மிக பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை அங்கு அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை.
குறிப்பாக அயோத்தி உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்தது. இதற்கிடையில், ராமாயணம் தொடரில் நடித்த சுனில் லஹ்ரி அப்பகுதி மக்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
லஹ்ரி அயோத்தி சாடல்
"இதே அயோத்தி மக்கள்தான் சீதா தேவி நாடு திரும்பிய பிறகு சந்தேகப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். கடவுளைக் கூட மறுப்பவர்களை என்னவென்று அழைப்பது? சுயநலவாதி தான். அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்குத் துரோகம் செய்துள்ளனர்.
இது வரலாற்றில் நிலைத்து இருக்கும்.. இது அயோத்தி மக்களுக்கு அவமானம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது இன்ஸ்டா பக்கத்தில், "அயோத்தி குடிமக்களே, சீதா தேவியைக் கூட விட்டுவைக்காத உங்கள் மகத்துவத்தை நாங்கள் வணங்குகிறோம்.
சிறிய கூடாரத்திலிருந்து ராமர் வெளியே வந்து அழகான கோவிலில் நிறுவப்படுவதை உறுதி செய்த மனிதருக்கு நீங்கள் துரோகம் செய்ததில் நாங்கள் அதிர்ச்சியடையவில்லை. ஒட்டுமொத்த தேசமும் இனி உங்களை மரியாதையுடன் பார்க்காது" எனச் சாடியுள்ளார்.