5 வயது குழந்தை தான அவரு - இனி டெய்லி 1 மணி நேரம் ரெஸ்ட் - அயோத்தி ராமருக்கு ஓய்வு
கடந்த மாதம் 22-ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது முதல் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் நேரில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
அயோத்தி ராமர்
உலகமெங்கும் பெரும் கவனத்தை ஈர்த்த அயோத்தி ராமரை நேரில் சென்று தரிசிக்க இன்னும் பலர் முற்பட்டு வருகின்றார். இதன் காரணமாக, அம்மாநிலத்தின் சுற்றுலா துறை பெருமளவில் வளர்ச்சியடையும் என நம்பப்படுகிறது.
அண்மையில், இது குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆண்டு 5 கோடி மக்கள் அயோத்திக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே 4 லட்சம் கோடியாக உயரும் என கூறி அது தமிழக பட்ஜெட்டான 3 லட்ச கோடியை விடவும் அதிகம் என்றார்.
குழந்தை தானே
இந்நிலையில்,அயோத்தி ராமர் கோயில் தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும். என தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
கடந்த ஜனவரி 23-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் காலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்ற பிறகு, 6 மணிக்கு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு இரவு 10 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீராம் லல்லா ஐந்து வயது குழந்தை என்பதால் அதிகாலையில் விழிக்கும் அவர் பக்தர்களை இடைவெளியின்றி சந்திப்பதால் சிறிது ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறி, அதன் காரணமாக, தினமும் மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை ஓய்வெடுக்கும் வகையில் கோயில் கதவுகள் சாத்தப்படும் என கூறினார்.