அந்த இடம் தெரிந்தது.. அதை வைத்து மோசமாக பரப்பினார்கள் - ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!
சீரியல் நடிகை தனக்கு நடந்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை கேப்ரில்லா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் நடிகை கேப்ரில்லா. இவர் சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.
இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. சீரியலில் கலக்கி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "படப்பிடிப்பின் ஒரு காட்சியின் போது நான் கையை தூக்க, என்னுடைய மார்பகம் முழுசாக தெரிந்து விட்டது. இதனை சொல்வதற்கு எனக்கு கூச்சமில்லை. கூச்சப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூகவலைதள பக்கத்தில் யாரோ சிலர் பகிர்ந்திருந்தார்கள்.
இதனை பார்த்து விட்டு, கமெண்ட் செக்ஷனில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்க சென்றேன். அங்கே, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசிக்கொண்டிருகிறார்கள்.
இதனை என்னுடைய காதலன் ஆகாஷிடம் கூறினேன்.. ஆனால், அவர் அப்படியா.. சரி விடு.. என்று ஒரே வார்த்தையில் அதனை கடந்து சென்று விட்டார் எனவும் நானும் அதனை கடந்து வந்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.
You May Like This Video