இந்த டான்ஸ் தான்.. நமீதாவ இப்போவரைக்கும் மறக்கவே முடியாது - சுந்தர்.சி சொன்ன ரகசியம்!
நடிகை நமிதா குறித்து சுந்தர்.சி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி
தமிழ் திரைத்துறையில் முறை மாமன் திரைப்படம் மூலமாகச் சுந்தர்.சி இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்தார். இதனால் தமிழ் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார்.
மேலும் இயக்குநர் சுந்தர்.சி தான் நடிகனாக மாறிய போது சந்தித்த சவால்களையும் எதை எப்படிச் சமாளித்தார் என்பது குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் என் கூட நடித்த நடிகைகளில் பிடித்த நடிகையென்றால் சிநேகா தான். ஆனால் மறக்கவே முடியாத நடிகையென்றால் அது நமீதா தான்.
எனக்கு டேன்ஸ் ஆடவே தெரியாது. ஆனால் என்ன எல்லா படத்திலும் டேன்ஸ் ஆட வைப்பார்கள் சிரித்துக் கொண்டே கூறினார். அதுமட்டுமில்லாமல் எல்லா டான்ஸ் மாஸ்டரும் எனக்கு தவறாமல் கொடுக்கிற ஸ்டெப் என்னென்ன ஹீரோயின தூக்கி வச்சு ஆடுற ஸ்டெப் தான் வரும் என்று கூறினார்.
நடிகை நமிதா
மத்த ஹீரோயின்னா பரவாயில்லை. ஆனால் இங்க நமீதாவை தோளில் தூக்கி வச்சிட்டு ஆடவேண்டுமானால் கொஞ்சம் கஷ்டம். நமீதாவ தூக்கி வச்சி ஆடணும்ங்குறதுக்காகவே நான் நிறைய பிராக்டீஸ் செய்துகொண்டு போவேன்.
அதுனாலயே என்னால் நமீதாவ மறக்க முடியாது என்று கூறினார். நான் வேற இயக்குநர் எடுக்கிற படத்தில் நடிப்பதற்கு நிறுத்த காரணம் இந்த டான்ஸ் தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.