பிக் பாஸ் சீசன் 8.. டபுள் எவிக்சனில் வெளியேறிய சாச்சனா - மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 8 எவிக்சனில் வெளியேறியே போட்டியாளர் சாச்சனா மொத்தம் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சாச்சனா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் மற்ற சீசன்களை விட சுவாரஸ்யம் குறைந்தே காணப்படுகிறது.
இவர்களுக்கு டஃப் கொடுக்க 6 போட்டியாளர்களை வைல்ட் கார்ட் என்ட்ரியை களமிறக்கினர்.ஆனால் அப்போதும் ஆட்டத்தில் எந்த ஒரு சுவாரஸ்யமும் நடக்க வில்லை. சென்ற வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸில் முத்துக்குமரன், ஜாக்குலின், சவுந்தர்யா, ஆனந்தி, சாச்சனா, ராணவ், ரயான் உட்பட 12 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.
சம்பளம்
நேற்று நடந்த எபிசோடில் இந்த வாரம் டபுள் எவிக்சனில் 2 போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாக விஜய் சேதுபதி கூறினார். அதன்படி, பிக் பாஸ் வீட்டிலிருந்து சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 சாச்சனா மொத்தம் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாச்சனா ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளமாக வாங்கியதாகவும், வீட்டிலிருந்த 60 நாட்களுக்கும் சேர்த்து அவர் ரூ. 12 லட்சம் சம்பாதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.