ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த photo - ஷாக்!
நடிகை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய் - அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து செய்து கொண்டனர். இவர்களுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே உறவு சரியில்லை என்று தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகினர். சமீபத்தில் நடத்த அம்பானி வீட்டுத் திருமணத்தில் ஐஸ்வர்யாராய் தனது மகளுடன் கலந்து கொண்டார்.
அதே போல் அபிஷேக் பச்சனும் தனது குடும்பத்தினருடன் தனித்தியாகக் கலந்து கொண்டனர்.மேலும் இருவரும் பிரிந்த வாழ்வதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து ஒன்றில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர்.
விவாகரத்து
இந்த நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் கருப்பு நிற பிளேசர் உடையில் இருக்க, ஐஸ்வர்யா கணவரின் உடைக்கு மேட்சிங்காக கருப்பு நிற சல்வார் அணிந்து உள்ளார்.
அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா மகிழ்ச்சியாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.பல மாதங்களாகக் கிளம்பிய இவர்களின் விசாகரத்து சர்ச்சைக்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.