அன்று ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க முடியாமல..ஆனால் இன்று சொந்த வீடு -மணிமேகலை உருக்கம்!
மணிமேகலை- ஹுசைன் வீட்டின் புதுமனை புகுவிழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிமேகலை
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக மணிமேகலை அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றினார்.
அதன் பிறகு 2017ஆம் ஆண்டு நடனக் கலைஞர் ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பதால், பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வாழ்ந்தனர். தொடர்ந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக மணிமேகலை எண்ட்ரி கொடுத்தார்.
இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலந்து கொண்டு பாரபட்சம் இல்லாமல் நடுவர்கள் முதல் வந்திருக்கும் விருந்தினர் வரை அனைவரையும் கலாய்த்துத் தள்ளி பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் ஆனார் மணிமேகலை.
புதுமனை புகுவிழா
அதுமட்டுமில்லாமல் யூடியூப் ஒன்றைத் தொடங்கி கணவர் ஹுசைனுடன் வீடியோக்கள் பதிவிட்டு அதன் மூலம் மணிமேகலையை மக்கள் மத்தியில் ரீச் ஆக்கியது. இந்த நிலையில் சென்னையில் பிரீமியம் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.அதற்கான புதுமனை புகுவிழா நேற்று நடந்தது.
இதனைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார் . அதில் திருமணமான முதல் வருடத்தில் தங்கியிருந்த வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டத்தைச் சந்தித்தோம். இன்று சென்னையில் பிரீமியம் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.