பிரம்மாண்டமாக நடந்த திருமணம்..சோபிதா நகையை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்!
நடிகை சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சோபிதா துலிபாலா
நடிகர் நாக சைதன்யா சமந்தாவை 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு சில ஆண்டுகளாக நடிகை சோபிதா, நாக சைதன்யா இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் ,இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் மணமக்களை திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சந்தித்து வாழ்த்தினர். இந்த நிலையில் நடிகை சோபிதா துலிபாலா நேற்றைய தினம் கழுத்தில் அணிந்திருந்த தங்கநகைகளைப் பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
தற்பொழுது சோபிதாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள எச்.ஆர். வணிகவியல் மற்றும் பொருளாதார கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டமும், வணிகவியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
சொத்து மதிப்பு
கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார்.அதன்பிறகு, 2016 ஆம் ஆண்டு ராமன் ராகவ்2.0 பட்டத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு படத்துக்கு 70 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், 10 முதல் 15 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.