நாக சைதன்யா சோபிதா திருமணம் - சமந்தா போட்ட சண்டை பதிவு
நாகசைதன்யா திருமணம் நடந்துள்ள நிலையில் சமந்தாவின் பதிவு வைரலாகி வருகிறது.
சமந்தா
நடிகை சமந்தாவும் நடிகைர் நாக சைதன்யாவும் பல வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
நாக சைதன்யா திருமணம்
இதனையடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா தூலிபாவை இரண்டாம் திருமணம் செய்கிறார். இதற்கான திருமண நிகழ்ச்சி இன்று ஹைதராபாதில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதில் ஒரு சிறுமியும், சிறுவனும் wrestling சண்டை போடுவது போல் உள்ளது. அதில், ஆரம்பத்திலே அந்த சிறுமி கை குலுக்கும் போது சிறுவன் கையை உதறுவான். அதன் பின் இறுதியில் சிறுமி வெற்றி பெறுவாள். தோல்வியில் சிறுவன் அழுகுவான்.
இந்த வீடியோவை பகிர்ந்த சமந்தா, #FightLikeAGirl என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் நாகசைதன்யா திருமணத்திற்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், சமந்தாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.