வெளியானது கீர்த்தி சுரேஷின் திருமணப் பத்திரிக்கை - இதை கவனீச்சிங்களா?
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணப் பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ்
மலையாள சினிமாவில் பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பிறகு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இது என்ன மாயம் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதனையடுத்து பைரவா ,ரஜினி முருகன்,மகாநதி ,சர்கார் , அண்ணாத்த உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் மகாநதி திரைப்படத்திற்காகத் தேசிய விருதைத் தட்டிச் சென்றார்.
திருமணப் பத்திரிக்கை
மேலும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாக உள்ளார். இந்த சுழலில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரைத் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமண அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோவாவில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் டிசம்பர் 12ம் தேதி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது