ரத்தக் காயங்களுடன் போலீஸில் நடிகர் புகார்.. பிரபல நடிகர் குடும்பத்தில் வெடித்த சொத்து பிரச்சனை!
பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.
மோகன்பாபு
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு என்ற 2 மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். தந்தை முதல் மகள் வரை தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
மேலும் தெலுங்கு திரைத்துறையில் புகழ்பெற்ற குடும்பமாக மோகன்பாபு சிறந்து விளங்குகிறது.ஆனால் கடந்த சில வருடங்களாக மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சினை நடந்து வந்துள்ளது. இந்த பிரச்சனை தற்பொழுது கைகலப்பாக மாறியுள்ளது.
சொத்து பிரச்சனை
இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாகத் தனது மகன் மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் காவல்துறையில் மோகன்பாபு புகார் அளித்ததாகத் தகவல் வெளியானது.
இதனையடுத்து ரத்தக்காயத்துடன் நடிகர் மனோஜ், 100-க்கு போன் செய்து தன்னையும் தனது மனைவியையும் மோகன்பாபு தாக்கியதாக,நேற்று புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சுழலில் நடிகர் மனோஜ் காயங்களுடன்,கழுத்தில் பெல்ட் அணிந்து கொண்டிருந்த புகைப்படங்கள் வைரலானது.
நடிகர் மனோஜின் குற்றச்சாட்டுக்கு நடிகர் மோகன்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.இது எதுவும் உண்மை இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.