2 வருஷம் ஆச்சு குட் நியூஸ் சொன்ன நடிகை ஹன்சிகா..குவியும் வாழ்த்துக்கள் - ஆனால் இது அது இல்ல!
நடிகை ஹன்சிகா வெளியிட்டுள்ள பதிவால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகை ஹன்சிகா
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.
அந்த நேரத்தில் திடீரென்று உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப் போனதன் விளைவாகத் தமிழ் சினிமாவில் வாய்ப்பு வருவது குறைந்தது. இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹா கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரைத் திருமணம் செய்து கொண்டார்.
வைரல் பதிவு
மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகா சோஹேல் திருமண வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு வருகிறார்.
தற்பொழுது ஹன்சிகா இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.