தாண்டவமாடும் மர்ம நோய்; கொத்தாக மக்கள் மருத்துவமனையில் அனுமதி - திண்டாடும் தலைநகர்!
மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மர்ம நோய்
டெல்லி, காசியாபாத் பகுதியில் மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வயிற்று வலி, வாந்தி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தண்ணீர் பிரச்னை காரணமாக இந்த தொற்று பரவுகிறதா என்பதை கண்டுபிடிக்க,
அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 15 தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் அதன் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீர் காரணமா?
இது குறித்து பேசியுள்ள அப்பகுதி மக்கள், “கடந்த சில நாட்களாக நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஏராளமான மக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றம் மற்றும் வெப்பம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
தண்ணீர் காரணமாகவே இந்த தொற்று பரவுவதாக சிலர் கூறுகின்றனர்” எனத் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.