சோம்பீகளாக மாறும் புறாக்கள்.. மனிதர்களுக்கு பரவும் மர்ம நோய் - கொடூரம்!
நோய் தாக்கத்தினால் புறாக்கள் சோம்பீகளாக மாறும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நோய்
பிரிட்டன், ஜெர்ஸி பகுதியில் ஒருவித மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள புறாக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்தொற்றை பாராமிக்சோவைரஸ் அல்லது நியூகேஸில் நோய் என அழைக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் புறாக்கள் இறகுகள் வலிமை இழந்து, கழுத்து கடுமையாக முறுக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் புறாக்கள் பறக்கமுடியாமல் போவதுடன் அவற்றின் மலமும் பச்சை நிறத்தில் வெளியேறுகிறது. இந்த நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் அங்குள்ள அனைத்து பறவைகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புறாக்கள் உணவுகள் சாப்பிடாதாம்.
அபாயம்
இந்த நோயின் தீவிரத் தன்மையை குறைத்து அவை உயிர் வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கலாமே தவிர முழுவதுமாக குணப்படுத்த மருந்துகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் காப்பகங்களில் புறாக்களின் நிலை மோசமடைந்தால் அவை கருணை கொலை செய்யப்படும்.
இந்த நோய் புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் மத்தியில் வேகமாகப் பரவும் என்றாலும் கூட, இதனால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை. அவர்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், பறைவைகளை கையாளும் மனிதர்களுக்கு கான்ஜூக்டிவிடிஸ் போன்ற அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.