நடிகை மீனா கணவர் இறப்புக்கு இது தான் காரணம் - கலா மாஸ்டர் பரபரப்பு பேட்டி..!
நடிகை மீனா கணவர் வித்யாசாகர் இறந்ததற்கான காரணம் குறித்து நடன இயக்குநர் கலா மாஸ்டர் பேட்டி அளித்துள்ளார்.
மீனா கணவர் உயிரிழப்பு
நடிகை மீனா கணவர் கடந்த வித்யாசாகர் கடந்த ஜூன் 28ம் தேதி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு காரணம் நுரையீரல் தொற்று என்று கூறப்பட்டு வந்தது.
அவரின் உயிரிழப்பு தொடர்பாக பல வதந்திகள் வெகுவாக பரவ தொடங்கின. இதையடுத்து மீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டு வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
உயிரிழப்புக்கு காரணம் என்ன?
நடிகை மீனாவின் நெருங்கிய தோழியும், பிரபல நடன இயக்குநருமான கலா மாஸ்டர் வித்யாசாகர் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பாம்பேவில் இருக்கும் புறா எச்சத்தை சுவாசித்தாலே தவறு என்று சொல்வார்கள் பெங்களூரில் அந்த புறாக்கள் நிறைய இருக்கிறது.
இப்படி பட்ட பிரச்சனை, லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படும். அந்த ஒவ்வாமை சாகருக்கு வந்துவிட்டது" என கலா மாஸ்டர் முதல் முறையாக கூறியுள்ளார்.