திடீரென 100 மாணவிகளுக்கு கால்கள் செயலிழப்பு - பள்ளியை இழுத்து மூடிய அரசு!

Kenya
By Sumathi Oct 06, 2023 10:56 AM GMT
Report

100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நோய்

கென்யாவின் எரேகியில் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, 95க்கும் மேலான மாணவிகளை திடீரென மர்ம நோய் ஒன்று தாக்கியுள்ளது.

திடீரென 100 மாணவிகளுக்கு கால்கள் செயலிழப்பு - பள்ளியை இழுத்து மூடிய அரசு! | 100 Girls Hit With Mysterious Illness Kenya

இதனால் அத்தனை மாணவிகளின் கால்களும் முடங்கியது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் இரத்த மாதிரிகள் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.

பள்ளி மூடல் 

அதில், சிறுமிகளின் உடலில் நீரிழிப்பு ஏற்பட்டிருப்பது மற்றும் எலெக்ட்ரோலைட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சிறுமிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. தற்போது, இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

சோம்பீகளாக மாறும் புறாக்கள்.. மனிதர்களுக்கு பரவும் மர்ம நோய் - கொடூரம்!

சோம்பீகளாக மாறும் புறாக்கள்.. மனிதர்களுக்கு பரவும் மர்ம நோய் - கொடூரம்!