18 வயதிலேயே திருமணம்; 2 முறை கருக்கலைப்பு - பிரபல பாடகி வேதனை!
பாடகி சுஜாதா மோகன் தனது 43வது திருமண நாளை கொண்டாடினார்.
பாடகி சுஜாதா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 4000 ஆயிரம் பாடல்களை பாடியவர் பாடகி சுஜாதா மோகன்.
90களில் மொலோடி குயின் இவர். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தில் வரும் புது வெள்ளை மழை என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சை தன் வசப்படுத்தினார்.
2000த்தின் ஆரம்பம் முதல் 2008 வரையிலும் பல சிறந்த பாடல்களை பாடி கொடி கட்டி பறந்தார் சுஜாதா. இவருக்கு அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டதால் 18 வயது முடிவடைந்ததும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவரது கணவர் ஒரு மருத்துவர் குழந்தைகள் நல நிபுணர்.
திருமண நாள்
இந்நிலையில், இவருக்கு இரண்டு முறை அபார்ஷன் ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் பாடகி ஸ்வேதா பிறந்துள்ளார். ஸ்வேதா ஸ்கூல் படிக்கும்போதும் காலேஜ் படிக்கும்போதும் கேரியரில் பிசியாக இருந்த காரணத்தினால் அவருடைய ஸ்கூல் ஃபங்ஷன், காலேஜ் ஃபங்ஷன், ஸ்போர்ட்ஸ் பங்க்ஷன் என எதிலும் எங்களால் கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது.
அது இப்போது நினைத்தாலும் அது வருத்தமாக தான் இருக்கிறது. எங்களை அந்த நேரங்களில் அதிகமாக ஸ்வேதா மிஸ் பண்ணுவார். ஆனால் எங்களால் அந்த நேரங்களில் அவளோடு இருக்க முடியவில்லை. அதற்கு இப்போது நான் மன்னிப்பு தான் கேட்க முடியும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.
அதற்கு எல்லாம் ஈடு செய்யும் வகையில் தற்போது ஸ்வேதாவின் மகளை பராமரித்து வருவது எங்களுடைய வேலையாகத்தான் இருக்கிறது. அதை நாங்கள் சந்தோஷமாக செய்கிறோம். ஸ்வேதா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் சுஜாதா தான் அவருடைய மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது என எல்லாவற்றையும் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அண்மையில் இவர் தனது 43வது திருமண நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.