கருமுட்டை விவகாரம் - சிறுமி தற்கொலை முயற்சி.. நாட்டை உலுக்கிய சம்பவம்!
கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருமுட்டை விவகாரம்
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுத்த கொடூர சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி,

போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, மருத்துவ குழுவினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் ஈரோடு,
சிறுமி தற்கொலை
பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறிய சில விஷயங்கள் கேட்போரை கண்கலங்க வைத்துள்ளது. அதாவது தன்னுடைய தாயின் பெயர் இந்திராணி என்றும், தன்னுடைய தந்தை பெயர் சரவணன் என்றும் கூறிய சிறுமி,
ரணமாக வலிக்கும்
தனக்கு 3 வயது இருக்கும் போது இருவரும் பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தனது தாய் இந்திராணி சையது அலி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர் தன்னிடம் பல முறை தவறான முறையில் நடந்துகொண்டதாகவும்
இதன் காரணத்தால் தான் 10ஆம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சையது அலி தன்னை பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறிய சிறுமி ஒவ்வொரு முறை மருத்துவமனை சென்று வரும்போதும்
வாக்குமூலம்
வயிறு ரணமாக வலிக்கும் எனவும் கூறியுள்ளார். ஆனால் தன்னிடம் இருந்து கரு முட்டை எடுக்கிறார்கள் என்ற விவரம் தனக்கு தெரியவில்லை என கூறிய சிறுமி இதற்கு தனது தாய் உடந்தையாக இருந்ததுதான் மிகவும் கவலை அளிக்கிறது எனக்கூறியுள்ளார்.
மேலும் தன்னிடம் இருந்து 8 முறை கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய சிறுமி, இதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்கள் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாஃபியா கும்பல்
அதனை தொடர்ந்து தனக்கு பள்ளிக்கு சென்று படிக்க ஆசையாக உள்ளது என கண்கலங்கிய சிறுமி கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து, ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த
சிறுமி கழிவறையில் வைத்து கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தை எடுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை மீட்ட காப்பக ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைக்க சட்டப்போராட்டம் நடந்து வரும் நிலையில் சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி துணிச்சலாக வந்து இது குறித்து புகார் அளித்துள்ள காரணத்தால் கருமுட்டை திருட்டில் ஈடுபட்ட மாஃபியா கும்பல் தொடர்பான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - பிரபல பாப் பாடகருக்கு சிறை!
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil