பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கருமுட்டை விற்பனை: கள்ளக்காதலனுடன் தாய் கைது
மகளை கள்ளக்காதலனை விட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து தொடர்ந்து கருமுட்டை விற்பனை செய்து வந்ததில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கொடூரத்தாய்
ஈரோட்டில் 38 வயதாகும் அந்த பெண்ணுக்கு 16வயதில் மகள் உள்ளார். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு ஈரோட்டை சேர்ந்த 40 வயதுடைய பெயிண்டருடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் தனது கருமுட்டையை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் காதலனுடம் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கருமுட்டை விற்பனை செய்வதில் தன் மகளையும் ஈடுபடுத்த காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார் அந்த பெண். அதனால் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
சிறுமிக்கு போலி ஆவணங்கள் மூலம் வயதை கூட்டி காட்டி ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் 8 முறை கருமுட்டை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் தாயின் ஆண் நண்பரால் சிறுமிக்கு தாங்க முடியாத தொல்லை ஏற்பட்ட நிலையில் சேலத்தில் உள்ள உறவினர் மூலம் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகாரளிக்க, சிறுமியின் தாய், கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த புரோக்கர் மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID IBC Tamil
பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள் IBC Tamil