ஸ்டோர் ரூமில்தான் தூங்குவார்; கடும் கோபம் வந்துச்சு - கணவர் குறித்து சுதா மூர்த்தி
சுயசரிதை நுாலில், சுதா மூர்த்தி கணவர் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சுயசரிதை
பிரபல தொழில் அதிபரும் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர் நாராயண மூர்த்தி(77). இவரது மனைவி சுதா மூர்த்தி(73). இருவரின் இளமைக்கால வாழ்க்கையை எழுத்தாளர் சித்ரா பானர்ஜி திவாகாருணி சுயசரிதையாக எழுதி வெளியிட்டுள்ளார்.
அதற்கு சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் ஆரம்பகால வாழ்க்கை' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த நூலில் சுதா மூர்த்தி, 'இன்போசிஸ்' சிறிய நிறுவனமாக இருந்த சமயத்தில் நாராயணமூர்த்தி அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு சென்றார்.
சுதா மூர்த்தி தகவல்
'டேட்டா பேசிக்ஸ் கார்ப்ரேஷன்' என்ற அந்த நிறுவனத்தின் தலைவராக டான் லைலெஸ் இருந்தார். முசுடு பேர்வழியான அவர் கடைசி நேரத்தில் தயாரிப்புகளில் திருத்தங்களை கூறுவார். கட்டணங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்துவார். அது குறித்து நாராயணமூர்த்தி வாதிட்டால் அவர் மீது கோபப்படுவார்.
அவரது வீட்டுக்கு நாராயணமூர்த்தி சென்றிருந்த போது, தங்குவதற்கு தனி அறை கூட தராமல் ஸ்டோர் ரூமில், அட்டைப் பெட்டிகளுக்கு நடுவே உறங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதை மூர்த்தி என்னிடம் சொன்ன போது எனக்கு கடும் கோபம் வந்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதை பொறுத்துக் கொண்டார்.
அதே போல நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நான் விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அதை மூர்த்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். கணவன் -- மனைவி ஒரே நிறுவனத்தில் பணியாற்றினால், அந்நிறுவனம் தொழில்முறை நிறுவனமாக இருக்காது. குடும்ப நிறுவனமாக சுருங்கிவிடும் என கருதியதாக பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.