நான் தான் பிரதமரின் மாமியார்; ஆடிப்போன விமான நிலையம் - பின்னணி என்ன?
பிரதமரின் மாமியாருக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுதா மூர்த்தி
இன்போசிஸ் நாராணயமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி சுதா மூர்த்தி(72). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளார். மகள் அக்ஷதா மூர்த்தி தான் பிரிட்டன் பிரதமரும் இந்திய வம்சாவளி-யை சேர்ந்தவருமான ரிஷி சுனக்-ன் மனைவி.
இந்நிலையில், சுதா மூர்த்தி பிரபலமான தி கபில் சர்மா ஷோவில் கலந்துக் கொண்டார். அதில் பேசுகையில், "ஒருமுறை நான் லண்டன் சென்றிருந்தபோது, இமிகிரேஷன் அதிகாரி லண்டனில் எனது குடியிருப்பு முகவரியைக் கேட்டு, இமிகிரேஷன் படிவத்தில் எழுத கூறினார்கள்.
யார் இவர்?
என்னுடன் என் மூத்த சகோதரியும் இப்போது இருந்தார். நான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடான '10 டவுனிங் ஸ்ட்ரீட்' என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய மகனும் லண்டனில் தான் வசிக்கிறார், ஆனால் மகன் வீட்டின் முழு முகவரி எனக்கு நினைவில் இல்லை.
வேறு வழி இல்லாமல் நான் இறுதியாக 10 டவுனிங் ஸ்ட்ரீட் என எழுதினேன்.. இதை பார்த்த இமிகிரேஷன் அதிகாரி என்னை முழுவதுமாக நம்பாமல் என்ன ஜோக் பன்றீங்களா?! என்று கேட்ட நிலையில் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் என தான் அக்ஷதா மூர்த்தியின் தாய் என்றும்,
பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்-ன் மாமியார் எனக் கூறியுள்ளார்.
இவருக்கு சமீபத்தில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் அவருடைய சமூக சேவை பணிகளை பாராட்டி வழங்கப்பட்டது.