விமான நிலைய பார்சலில் மண்டை ஓடு - அதிகாரிகள் அதிர்ச்சி!
விமான நிலைய பார்சலில் மண்டை ஓடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரியர்
மெக்சிகோ குவெரேடாரோ இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் அமெரிக்காவிற்கு செல்லும் கொரியர் பார்ஸல்களை எக்ஸ்-ரே மூலம் ஸ்கேன் செய்து கொண்டிருந்தனர். அதில் வித்தியாசமாக ஏதோ இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
தொடர்ந்து பிரித்து பார்த்ததில், கார்டுபோர்டு பெட்டிக்குள் நான்கு மனித மண்டை ஓடுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத் தாளில் சுற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்டை ஓடுகள் மெக்ஸிகோ நாட்டில் கொடூர நகரம் என்று அழைக்கப்படும் மைக்கோவாகன் என்ற மேற்குக் கடலோர மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.
மண்டை ஓடு
இங்கு மனித வதைகளும், குற்றங்களும் அதிகம் நடக்கும் என்று போலீஸ் சார்பில் தெரிவித்தனர். ஆனால் கிடைத்த மண்டை ஓடுகளின் வயது, பாலினம், வயது போன்ற விபரங்களை காவல் துறை வெளியிடவில்லை.
மனித எச்சங்களை அனுப்புவதற்கு தகுதிவாய்ந்த சுகாதார அதிகாரியிடமிருந்து சிறப்பு அனுமதி தேவை. ஆனால் கிடைத்துள்ள பார்சல் அப்படி எதுவும் இல்லை
மேலும் இது அமெரிக்காவின் தென் கரோலினாவின் மானிங்கில் உள்ள முகவரிக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்றது தெரியவந்தது.