2க்கும் ஒரே ஸ்பூன்; அப்போ உங்க மாப்பிள்ளைய தொடாதீங்க - சர்ச்சையான சுதா மூர்த்தி கருத்து!
சுதா மூர்த்தி சமீபத்தில் தனது உணவு குறித்த கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுதா மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் சுதா மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், தான் ஒரு சைவ பிரியர், முட்டை அல்லது பூண்டு கூட சேர்த்து கொள்ள மாட்டேன். ஹோட்டல்களுக்கு சென்றால் கூட சைவ ஹோட்டல்களாக பார்த்து தான் செல்வேன்.
காரணம், ஹோட்டல்களில் பயன்படுத்தும் ஸ்பூன்கள் சைவம் மற்றும் அசைவ உணவுகள் என அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம். அதே போல் வெளி ஊர்களுக்கு செல்லும் போது கூட பெரும்பாலும் வீட்டிலிருந்தே உணவை எடுத்து சென்று விடுவேன் எனத் தெரிவித்தார்.
சர்ச்சை கருத்து
இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், இவரின் மருமகனும், பிரிட்டன் பிரதமருமான ரிஷி சுனக் அசைவ உணவுகளை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இனி உங்கள் மருமகனையும் தொடாதீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், அவரின் உணவு தேர்வை சொல்ல கூடவா அவருக்கு உரிமை இல்லை என்றும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.