புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சப்-இன்ஸ்பெக்டர் வெறிச்செயல்!
புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாலியல் தொல்லை
சென்னை, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன்(55). இவர் புகார் கொடுக்க வந்த பெண் ஒருவரிடம் தோளில் கையை போட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
மேலும், இதுகுறித்து அந்த பெண் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவை அளித்தார். அதன் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் கைது
தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்பின்
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.