ஆசிரமத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் - பெண் கதறல்!

Sexual harassment Andhra Pradesh
By Vinothini Jun 21, 2023 07:05 AM GMT
Report

ஆசிரமத்தில் வசித்து வரும் சிறுமிக்கு சாமியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்ந பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாமியார்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரமத்தை நடத்தி வருபவர் பூர்ணானந்தா என்ற சாமியார். அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன.

swamy-poornananda-arrested-for-girl-molested-case

இங்கு 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில், 15 வயதான ஒரு சிறுமிக்கு அந்த சாமியார் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

கைது

இந்நிலையில், அந்த சிறுமி விஜயவாடா காவல் நிலையத்தில் சென்று சாமியார் மீது புகாரளித்துள்ளார். அதில் அவர் தன்னை சுவாமி பூர்ணானந்தா சித்ரவதை செய்ததாகவும், திரும்ப திரும்ப பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

swamy-poornananda-arrested-for-girl-molested-case

அதன் அடிப்படையில் போலீசார் அவரை போக்சோ மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ், பூர்ணானந்தா மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.