ஆபாசப்படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த கணவன் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Sexual harassment Kerala India
By Jiyath Jan 04, 2024 07:39 AM GMT
Report

விருப்பத்துக்கு மாறாக பாலியல் செயல்களில் கணவர் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இளம்பெண் மனு

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 24 வயது இளம்பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆபாசப்படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த கணவன் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Wife Right To Divorce Sexual Violence Kerala Hc

அந்த மனுவில், தனது கணவர் ஆபாச படங்களை பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும், தனது விருப்பத்துக்கு மாறாக கணவர் செயல்படுவதாலும் விவாகரத்து வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்திற்கான காரணம் ஏற்புடையது இல்லை என அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து அந்த இளம்பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் அமிர்த் ராவல், சுதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது "பாலியல் வக்கிரம் குறித்த நபர்களின் கருத்துகள் மாறுபடும்.

நீதிமன்றம் அதிரடி

வயது வந்தோர் தங்கள் சுதந்திரம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் செயல்களில் ஈடுபட்டால், அது அவர்கள் விருப்பம். அதில் நீதிமன்றங்கள் தலையிடாது.

ஆபாசப்படங்கள் காட்டி பாலியல் தொல்லை செய்த கணவன் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! | Wife Right To Divorce Sexual Violence Kerala Hc

மனைவியின் விருப்பத்துக்கும் மாறாக பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால், அது உடல் மற்றும் மனரீதியான கொடுமையாக அமையும். திருமண வாழ்வில் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் செயல்களில் கணவர் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு.

மனுதாரரின் கணவர் தனது இச்சைக்கு இணங்க மறுத்த மனைவியை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதன் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொண்டு விவாகரத்து வழங்கப்படும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.