பாஜகவுக்கு தமிழகத்தின் மீது கோபமல்ல.. தீராத வன்மம் - சு.வெங்கடேசன் எம்.பி!

Tamil nadu Chennai Michaung Cyclone
By Jiyath Apr 27, 2024 12:28 PM GMT
Report

பாஜகவுக்கு தமிழகத்தின் மீது தீராத வன்மம் இருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார் 

நிதி ஒதுக்கீடு 

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாஜகவுக்கு தமிழகத்தின் மீது கோபமல்ல.. தீராத வன்மம் - சு.வெங்கடேசன் எம்.பி! | Su Venkatesan Mp About Bjp Government

அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் ரூ. 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: யானை பசிக்கு சோளப்பொறியா? ஜெயக்குமார் சாடல்!

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி: யானை பசிக்கு சோளப்பொறியா? ஜெயக்குமார் சாடல்!

சு.வெங்கடேசன் 

மேலும், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி "கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3,454 கோடி அறிவிப்பு.

பாஜகவுக்கு தமிழகத்தின் மீது கோபமல்ல.. தீராத வன்மம் - சு.வெங்கடேசன் எம்.பி! | Su Venkatesan Mp About Bjp Government

தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ,38,000 கோடி. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம். " என்று குறிப்பிட்டுள்ளார்.