மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு ; தமிழகத்திற்கு நிவராண நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு!

Governor of Tamil Nadu Chennai Government Of India Michaung Cyclone
By Swetha Apr 27, 2024 07:25 AM GMT
Report

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜாம் புயல்  

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்பில் தத்தளித்தது. அதே சமயத்தில் அடுத்த சில நாட்களிலேயே

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு ; தமிழகத்திற்கு நிவராண நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு! | Centre Allots Money For Michaung

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததில் கடும் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 6,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது.

சென்னை வெள்ளம்: நிவாரணப் பணிகளில் ஈடுபட விரைந்து வாருங்கள் - திமுகவினருக்கு முதல்வர் அழைப்பு!

சென்னை வெள்ளம்: நிவாரணப் பணிகளில் ஈடுபட விரைந்து வாருங்கள் - திமுகவினருக்கு முதல்வர் அழைப்பு!

நிவராண நிதி

இதனிடையே வெள்ள பாதிப்பு நிவாரணம் மற்றும் சேதங்களை சீர் செய்ய மத்திய அரசிடம் சுமார் 37,000 கோடி ரூபாய் வழங்க கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு ; தமிழகத்திற்கு நிவராண நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு உத்தரவு! | Centre Allots Money For Michaung

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. முன்னதாக வெள்ள பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

ஆனால், தற்போது 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை தொடர்ந்து, அந்த 285 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது. அதேபோல சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியான 397 கோடி ரூபாயில் 160 கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளது.