வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்த மாணவர்கள் - சோதனையில் ஷாக்!
மாணவர்கள் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா செடி
கோவை, குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இதில் போதைப் பொருள்கள் விற்பனை, புழக்கம் குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கைது
அப்போது, கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறை ஒன்றில் 24 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த 24 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் விஷ்ணு, அனிருத், தனுஷ், அபிநவ் கிருஷ்ணா மற்றும் கலைவாணன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் கலைவாணனைத் தவிர மற்ற நான்கு பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.