கள்ளக்காதலில் உல்லாசமாக இருந்த தாய் - மகன்களால் நேர்ந்த கதி!
அம்மாவுடன் உறவில் இருந்த நபரை மகன்கள் கொலை செய்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம்
குஜராத், மோக்சான் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தன் ஜி தாகூர்(45). கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சஞ்சய் தாகூர்(27). மற்றொரு மகன் ஜெய்ஷ் தாகூர்(23). இவர்களது தந்தை இறந்துவிட்டார். ரத்தன் ஜிக்கும் தாய்க்கும் இருக்கும் உறவு மகன்களுக்கு தெரியவந்துள்ளது.
மகன்கள் வெறிச்செயல்
உடனே மகன்கள் இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் இருவருமே அதற்கு உடன்படாமல், ரத்தன் ஜி மகன்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதுவும் தெரியவரவே, 2 மகன்களும் ரத்தன் ஜியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, கத்தி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு ரத்தன் ஜி மற்றும் அவரது நண்பர் ஜிகுஜி பர்மார் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ரத்தன் ஜி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸர சஞ்சய் தாகூர் மற்றும் ஜெய்ஷ் தாகூர் இருவரையும் கைது செய்துள்ளனர்.