10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த மாணவன் - என்ன நடந்தது?
10-ம் வகுப்பு மாணவியை, மாணவன் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேலி செய்த விவகாரம்
கரூர், தரகம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவி வீட்டருகே உள்ள சோளக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை பார்த்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவி படிக்கும் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மாணவன் கொலை முயற்சி
உடனே அந்த மாணவனை பிடித்து விசாரித்ததில், மாணவி வீட்டில் இருந்தபோது அவருக்கு போன் செய்த மாணவன், அருகில் உள்ள சோளக்காட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். மாணவி செல்ல மறுத்த நிலையில், உனக்காக ஒரு பரிசு வாங்கி வைத்திருப்பதாகவும், வந்தால் தருவதாகவும் கூறியுள்ளார்.
உடனே அங்கு சென்ற மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இருவரும் அண்ணன்-தங்கை உறவு முறை கொண்டவர்கள். அந்த மாணவனை ஒன்றுக்கும் உதவாதாவன் என கேலி செய்ததால் கத்தியுடன் சென்று கழுத்தை அறுத்துள்ளார்.
மேலும் மாணவியை சோளக்காட்டிற்கு வரவழைத்து 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவி கழுத்தில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளார்.