காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை.. காரில் நடந்த கொடூர சம்பவம் - இளைஞர் வெறிச்செயல்!
காதலை ஏற்க மறுத்த பள்ளி ஆசிரியை வாகனத்தில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியை
திருநெல்வேலி மாவட்டம் கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜு (38) என்பவர் செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 24 வயது பெண் ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுப் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த இளம்பெண் பணி மாறுதல் காரணமாக வேறொரு தனியார்ப் பள்ளிக்குச் சென்றதால் ராஜுவிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.ஆனால் தொடர்ந்து ராஜு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் நடக்கவில்லை . இதனால், ராஜு ஆத்திரத்திலிருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ,அந்த இளம்பெண் வழக்கம் போலப் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு திடீரென காரில் வந்த ராஜு,தன்னுடன் காரில் வருமாறு அந்த பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்கவே பலவந்தமாக அவரை தனது வாகனத்தில் ராஜு அழைத்துச் சென்றுள்ளார்.
அதிர்ச்சி
அப்போது கார், வீட்டிற்குச் செல்லாமல் கன்னியாகுமரியை நோக்கிச் சென்றுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த பெண்ணிடம் ராஜு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வழியாக ராஜுவிடம் இருந்து தப்பித்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ராஜுவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் , ஆசிரியையை ராஜு ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால் அவரை காரில் கடத்தியதும் தெரிய வந்தது.இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.