பெண் குழந்தைகளுக்குக் கல்வி பற்றி பேசிய மாணவி.. ஆசிரியர் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!
10-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்
குஜராத் மாநிலம் சபர்கந்தா என்ற பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 26-ந்தேதி நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பெண் குழந்தையைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதன் அவசியம் குறித்துப் பேசி பிரபலமானார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் உன்னைத் தேர்வில் தோல்வி அடையச் செய்துவிடுவேன் மிரட்டியுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.