பள்ளி மாணவர்களுக்காக ISRO-வின் 'இளம் விஞ்ஞானிகள் திட்டம்' - விண்ணப்பிப்பது எப்படி?

Tamil nadu India Indian Space Research Organisation ISRO
By Jiyath Feb 19, 2024 08:00 AM GMT
Report

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பள்ளி மாணவர்களுக்காக ISRO-வின்

இதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் 2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை அடங்கும்.

வேலையை இழந்த கூலித்தொழிலாளி; இப்போது மாதம் ரூ.3 லட்சம் சம்பாத்தியம் - அப்படி என்ன செய்தார்?

வேலையை இழந்த கூலித்தொழிலாளி; இப்போது மாதம் ரூ.3 லட்சம் சம்பாத்தியம் - அப்படி என்ன செய்தார்?

விண்ணப்பிப்பது எப்படி?

மேலும், வகுப்பறை விரிவுரைகள், ரோபாட்டிக்ஸ் சவால், ராக்கெட், செயற்கைகோள்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்காக ISRO-வின்

நடப்பாண்டு (2024) இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற மார்ச் 20-ம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.