வேலையை இழந்த கூலித்தொழிலாளி; இப்போது மாதம் ரூ.3 லட்சம் சம்பாத்தியம் - அப்படி என்ன செய்தார்?
தினக்கூலியாக இருந்த நபர் ஒருவர் தற்போது மாதம் ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
ஐசக் முண்டா
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி ஐசக் முண்டா. இவர் தினமும் ரூ. 250 சம்பாதித்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். திடீரென கொரோனா காலகட்டத்தில் ஐசக் முண்டா தனது வேலையை இழந்தார்.
இதனால் அவரின் குடும்பத்திற்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் யூடியூபில் வீடியோ தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். பின்னர் பாரம்பரிய ஒடியா உணவு வகைகளை சாப்பிடும் வீடியோக்களை அவர் யூடியூபில் பதிவிட்டுள்ளார்.
ரூ.3 லட்சம் சம்பாத்தியம்
மெதுவாக இவரின் வீடியோக்களை மக்கள் ரசிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இவர் மாதம் ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். இதுகுறித்து ஐசக் முண்டா கூறுகையில் "எனது முதல் யூடியூப் வீடியோவை மார்ச் 2020-ல் பதிவேற்றினேன்.
ஆரம்பத்தில், எனது வீடியோக்களை யாரும் பார்க்கவில்லை. ஆனால் மெதுவாக, மக்கள் எனது சுயவிவரத்தைப் பார்க்கத் தொடங்கினர். அமெரிக்கா, பிரேசில், மங்கோலியா போன்ற நாடுகளில் எனது வீடியோக்களைப் பார்ப்பது ஒரு கனவாக இருந்தது.
மன்கி பாத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்டேன். இப்போது நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையை எனது குடும்பத்துக்கு நான் வழங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.