ஆண் நண்பர்களே வன்கொடுமை செய்த சம்பவம் -கல்லூரி மாணவி கர்பம்!
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்கள் அத்துமீறியதாகக் கல்லூரி மாணவி புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருந்து
ஐடி ஊழியர்கள்,கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வரை வார இறுதி நாட்களில் என்ஜாய் செய்ய பப் மற்றும் பாட்டிக்குச் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாகச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெறும் பாட்டிகள் புகழ்பெற்றவை.
இந்த நிலையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்கள் அத்துமீறியதாகக் கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது : கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது ஆண் நண்பர்களுடன் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன். அப்போது நண்பர்களுடன் குளிர்பானம் குடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன்.
கல்லூரி மாணவி
இந்த நிலையில் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்த போது நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.மேலும் நண்பர்கள் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் நண்பர்கள் அத்துமீறி இருக்கலாம் எனப் பரபரப்பு புகாரைத் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவியின் புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவிக்கு அவரது நண்பர்களே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்களா? அல்லது வேறு யாரும் அப்படிச் செய்தார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.