செருப்புக்காக நடந்த மோதல் - பள்ளியில் வைத்து மாணவருக்கு நேர்ந்த விபரீதம்
செருப்பை ஒளித்து வைத்ததால் நடந்த மோதலில் மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செருப்பால் மோதல்
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ரமேஷ் என்பவரின் மகன் ஆகாஷ் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தலைமை ஆசிரியர் புஷ்பராஜ் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில் கலந்து விட்டு வெளியே வந்த ஆகாஷின் செருப்பு காணாமல் போயுள்ளது. அங்கு படித்து வந்த செல்லிபாளையத்தை சேர்ந்த மாணவன் தான் தான் செருப்பை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றி கடுமையாக தாக்கியுள்ளனர்.
மாணவர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் நிலை குலைந்த ஆகாஷ், சம்பவ இடத்தில சுருண்டு விழுந்துள்ளார். உடனே அவரை மீட்ட ஆசிரியர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆகாஷை அடித்துக் கொலை செய்ய அந்த மாணவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் மாவட்டக் கல்வி அலுவலர் விஜயன் விசாரணை நடத்தியுள்ளார். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து மாணவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.