ஆசிரியையின் மகள் திருணம் - ரூமுக்குள் முன்னாள் மாணவி செய்த காரியம் - அதிர்ச்சி!

Tamil nadu Crime Kanyakumari
By Jiyath Apr 08, 2024 06:34 AM GMT
Report

மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்த பெண் 10 பவுன் நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருமணம் 

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியையின் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் விருந்து உபசரணை அழகியமண்டபத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆசிரியையின் மகள் திருணம் - ரூமுக்குள் முன்னாள் மாணவி செய்த காரியம் - அதிர்ச்சி! | Student Steal Gold From Teacher Daughters Wedding

இதற்காக திருமணம் முடிந்த கையோடு மண்டபத்துக்கு வந்த மணப்பெண் அலங்காரம் செய்வதற்காக அறைக்கு சென்றார். அங்கு பெண் அழகு கலைஞர் ஒருவர் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மணப்பெண்ணின் ஒரு தங்கச் சங்கிலியில் உள்ள கொக்கியை இணைக்க முடியவில்லை. உடனே அருகில் நின்ற மணப்பெண்ணின் சகோதரி தனது 10 பவுன் தங்க சங்கிலியைக் கழற்றி, அதில் உள்ள கொக்கியை மணமகளின் நகையில் இணைத்தார்.

வீட்டு மாடியில் கட்டு கட்டாக பணம் - 'தாலி மேல் சத்தியம்' - கதறிய மூதாட்டி!

வீட்டு மாடியில் கட்டு கட்டாக பணம் - 'தாலி மேல் சத்தியம்' - கதறிய மூதாட்டி!

நகை திருட்டு 

பின்னர் சகோதரியின் நகையை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு மணப்பெண்ணும், உறவினர்களும் அவசரமாக மேடைக்கு சென்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த நிலையில், மணப்பெண்ணின் சகோதரிக்கு தான் கழற்றி வைத்த 10 பவுன் நகை நினைவுக்கு வந்தது.

ஆசிரியையின் மகள் திருணம் - ரூமுக்குள் முன்னாள் மாணவி செய்த காரியம் - அதிர்ச்சி! | Student Steal Gold From Teacher Daughters Wedding

உடனே அவர் மண்டபத்தில் நகையை தேடியுள்ளார். ஆனால் நகை காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் நடித்திய விசாரணையில், நகையை எடுத்தது மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்த பெண் அழகு கலைஞர் தான் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்து நகையை மீட்ட போலீசார், அதனை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் நகை திருப்பிக்கிடைத்ததால் புகார் மீது நடவடிக்கை தேவை இல்லை என்று ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை கூறியுள்ளார். மேலும், இந்த பெண் அழகு கலைஞர், அந்த ஆசிரியையின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.