வீட்டு மாடியில் கட்டு கட்டாக பணம் - 'தாலி மேல் சத்தியம்' - கதறிய மூதாட்டி!
வயதான தம்பதியினரின் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சோதனை
வேலூர் மாவட்டம் காங்குப்பம் கிராமத்தில் நடராஜ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீடு உள்ளது. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு சோதனை செய்ய சென்றனர்.
அப்போது வீடு பூட்டியிருந்ததாலும், பலமுறை கதவைத் தட்டியும் திறக்காமல் இருந்ததாலும், கதவை உடைத்து உள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ரூ.2½ லட்சமும், தரைதளத்தில் ரூ.4½ லட்சமும் பணம் இருந்துள்ளது.
போலீசார் விசாரணை
இந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த முதியவர் அமைதியாக இருந்துள்ளார். ஆனால் அந்த மூதாட்டி மாடியில் இருந்த பணம் தன்னுடையது அல்ல என்றும், தரை தளத்தில் இருந்ததே தனது பணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தாலி மேல சத்தியமாக கூறுகிறேன் என்று போலீசாரிடம் ஆவேசமாக கூறினார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
