மாதவிடாய் என்று கூறியும் விடாத கும்பல்; அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - பகீர் தகவல்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னையில் கிண்டியில் தமிழ்நாடு அரசின் மாநில பல்கலைகழகமான அண்ணா பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் மெக்கானிக்கல் துறையில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் அதே பல்கலைகழகத்தில் 3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஒருவருடன் காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அண்ணா பல்கலைக்கழக நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம், இரண்டு ஆண்கள் காதலனைத் தாக்கியுள்ளனர்.
வெடிக்கும் விவகாரம்
இதனால் பயந்து போன காதலன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உடனே அந்த 2 ஆண்களும் மாணவியை தங்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர். தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த மாணவி கூறியபோதும் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இவ்வாறு அந்த மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஒருவரும் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் http://Cr.No.3/2024 u/s 63(a), 64(i), 75(I)(ii)(iii) என்ற முகவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.