70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞன் - கொடூர சம்பவம்!
இயற்கை உபாதைக்கு சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சிவகாசி, வடமலாபுரம் அண்ணா காலனியில் வசித்து வந்தவர் லட்சுமி(70). இவர் இயற்கை உபாதைக்காக இரவு நேரத்தில் அருகிலுள்ள முள் காட்டிற்குள் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காத நிலையில், அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், காலையில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் லட்சுமி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து உடனே விரைந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த காசி மாயன்(25) என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில்,
மூதாட்டி கொலை
பெண்கள் இயற்கை உபாதைக்காக ஒதுங்கும் பகுதியில் காசிமாயன் ஒளிந்திருப்பது வழக்கம். இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காசிமாயனை கைது செய்து விசாரித்தோம். மூதாட்டி லட்சுமி இயற்கை உபாதைக்காக ஒதுங்கும்போது அங்கு வந்த காசிமாயன் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மூதாட்டி லட்சுமி சத்தம் போடவும் கயிற்றினால் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், காசிமாயன் மீது பல்வேறு வழக்குகள் சிவகாசி வட்டார காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.