ஆம்புலன்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை -அக்காவே உடந்தையாக இருந்த அதிர்ச்சி சம்பவம்!
ஆம்புலன்சில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி . கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அன்று, சிறுமியின் சகோதரி கணவருக்கு உடலைப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆம்புலன்சில் வரவழைக்கப்பட்டு அதில் மூவரும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் சிறுமியின் சகோதரியும், அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் எனக் கூறிவிட்டு வாங்கச் சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.இதனால் சிறுமி அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆனால் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுநர் ராஜேஷ் கேவாட் மற்றும் உதவியாளர் ரேந்திர சதுர்வேதி இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத வீட்டில் அடைத்து வைத்து ஒரு நாள் இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அடுத்த நாள் காலையில் சிறுமியைச் சாலையோரமாக விட்டுச் சென்றுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி மிகுந்த சோர்வாக இருப்பதைப் பார்த்த அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மௌகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் சகோதரி ,அவரது கணவருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரேந்திர சதுர்வேதிக்கும் பழக்கம் இருந்துள்ளது.இவர்கள் திட்டமிட்டுத் தான் இந்த செயலை அரங்கேற்றியது தெரியவந்தது.
அதன் பிறகு போக்சோ வழக்கில் ஓட்டுநர் ராஜேஷ் கேவாட் உதவியாளர் வீரேந்திர சதுர்வேதி இருவரையும் கைது செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவரையும் கைது செய்யத் தேடி வருகின்றனர்.