பேருந்து படியில் சாகச பயணம்; மாணவனின் கால்கள் அகற்றம் - ரஞ்சனா சொன்னது நியாபகம் இருக்கா?

Chennai
By Sumathi Nov 18, 2023 04:03 AM GMT
Report

பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் நசுங்கிய 2 கால்களும் அகற்றப்பட்டுள்ளன.

கால்கள் அகற்றம்

குன்றத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருபவர் சந்தோஷ். மாலை பள்ளி முடிந்ததும் சந்தோஷ் சக மாணவர்களுடன் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

actress-ranjana-console

அப்போது, முன்பக்க படியில் அவர் தொங்கியபடி சென்றதில், தேரடி பகுதியை பஸ் கடந்தபோது எதிர்பாராத விதமாக சந்தோஷ் படிக்கட்டில் இருந்த தவறி கீழே விழுந்தார். அதில், பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது இரு கால்கள் மீதும் ஏறியுள்ளது.

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் - 6 கேள்விகளுக்கு பதிலளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு 24 மணி நேரம் கெடு

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் - 6 கேள்விகளுக்கு பதிலளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு 24 மணி நேரம் கெடு

ரஞ்சனா ஆறுதல்

இதில் அவரது கால்கள் நசுங்கின. உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் மாணவனின் 2 கால்களும் அகற்றப்பட்டன. மேலும் மூட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்களுக்கு இன்னொரு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

student-fell-bus-in-chennai

இதற்கிடையில், மாணவன் இரண்டு கால்களையும் இழந்த நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் ஆறுதல் கூறினார். பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணித்த மாணவர்களை 2 வாரங்களுக்கு முன்பு தான் ரஞ்சனா அடித்த நிலையில், தற்போது இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.