பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் - 6 கேள்விகளுக்கு பதிலளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு 24 மணி நேரம் கெடு

valasaravakkam chennaischoolboy boydiedinschool
By Swetha Subash Mar 28, 2022 01:12 PM GMT
Report

சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் - 6 கேள்விகளுக்கு பதிலளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு 24 மணி நேரம் கெடு | School Boy Died In Chennai Probe Started

மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-விபத்து நடைபெற்றது குறித்து அறிந்தும் பிற்பகல் வரை தாளாளர் பள்ளிக்கு வராதது ஏன்?

-பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பொறுப்பாளர்களை நியமிக்காத்து ஏன்?

-மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லாமல் 64 வயதானவரை ஓட்டுநராக நியமித்தது ஏன்?

-பள்ளி வாகனத்தில் இருந்து மாணவர்கள் அனைவரும் இறங்கிவிட்டார்களா என்பதை பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்?

-பள்ளி வளாகத்தில் பேருந்து வந்து செல்லும் நிலையில் பேருந்து வழித் தடத்தில் வேகத்தடை அமைத்திடாதது ஏன்? போன்ற கேள்விகளை கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.