ரூ.2000 காணவில்லை.. ஆடைகளை களைந்து சோதனை - மாணவி அவமானத்தால் தற்கொலை!
மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்ததில் தற்கொலை செய்துள்ளார்.
2 ஆயிரம் மாயம்
கர்நாடகா, பாகல்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெயஸ்ரீ என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். அவரது பையில் இருந்து ரூ.2 ஆயிரம் பணம் காணாமல் போகியுள்ளது.
இதுகுறித்து அதே பள்ளியில் படித்த 8ஆம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவியை கேட்டதற்கு அவர் இல்லை என மறுத்துள்ளார்.
மாணவி தற்கொலை
இந்நிலையில் அதனை நம்பாத ஆசிரியை, மாணவியின் ஆடைகளை சக மாணவிகளைக் கொண்டு களைந்து சோதனையிட்டுள்ளார்.
இதனால் மிகவும் மனம் உடைந்து வீடு திரும்பிய மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.