தேர்வில் காப்பி..ஆடைகளை கழற்ற சொன்ன ஆசிரியர் - அவமானத்தால் மாணவி தீக்குளிப்பு
காப்பி அடிப்பதாக கூறி ஆசிரியர் ஆடைகளை கழற்ற சொன்னதால் மாணவி தீக்குளித்துள்ளார்.
பள்ளி தேர்வு
ஜார்கண்ட், ஜாம்ஷெட்பூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் மாணவியின் ஆடைகளை கழற்றி பரிசோதனை செய்துள்ளார்.
இதனால், மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி, வீட்டிற்கு வந்து தீக்குளித்துள்ளார். அவர் 95 சதவீத தீக்காயங்களுடன் எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அவர், டிஎம்எச் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஆசிரியர் செயல்
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், மாணவி தனது சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகித்து உள்ளார். இதனால் மாணவின் சீருடைகளை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார்.
மாணவி, தனது வாக்குமூலத்தில், ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கடுமையாக எதிர்த்த போதிலும், சீருடையில் காப்பி சீட்டுகளை மறைக்கிறாய் என என்று சோதிக்க வகுப்பறையை ஒட்டியுள்ள அறையில் தனது ஆடைகளை கழற்றச் செய்ததாக காவல்துறை அதிகாரி கூறினார்.
மாணவி தீக்குளிப்பு
அந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பள்ளியில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்தார் செய்து கொண்டதாக மாணவியின் தாய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.