ஆடைகள் அகற்றியும், பாலியலாகவும் மாணவர்கள் துன்புறுத்தல்... ஆசிரியரே அத்துமீறலாமா?
அரசு பள்ளியில் குழந்தைகளின் ஆடைகளை அகற்றி சைக்கோ ஆசியரின் செயல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி ஆசிரியர்
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கடரகி நகரில் வசித்து வருபவர் அசுருதீன். இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுக்கா சிங்கபுரா கிராமத்தில் இயங்கி வரம் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பனி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணை ஆசிரியர், அசுருதீன் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வைரலானதை அடுத்து, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாலியல் வன்கொடுமை
அவர் அளித்த புகாரின் பேரில் கொப்பல் போலீசார் கோவாவில் வைத்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்து வரும் நிலையில், மேலும் ஒரு புகார் அவர் மீது போடப்பட்டதன் நகல் வைரலானது.
அதில், ஆசிரியர் அசுருதீனின் மனைவி சல்மா பேகம் சிந்தனூர் போலீசில் ஓராண்டுக்கு முன் ஒரு புகாரை அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புகாரில், “நான் வீட்டில் இருக்கும்போது, அவர் பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வருவார்.
மனைவி புகார்
திருமணமானவர்கள் மற்றும் விதவைகள் உட்பட பலர் இல்லத்துக்கு வருவார்கள். அவர்களுடன் தனிமையில் இருப்பதை பற்றி நான் கண்டித்தேன். ஆனால், அவர் இது பற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது பற்றி கேள்வி கேட்டதற்காக தன்னை சித்ரவதை செய்ததாகவும், மஹ்மூத் அசாருதீன் ஒரு சைகோ என்றும் எழுத்துப்பூர்வமாக அவரது மனைவி புகார் அளித்திருக்கிறார்.
துன்புறுத்தும் வீடியோ
அந்த கடிதம்தான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர் அசுருதீனிடம் இருந்த செல்போனை கைப்பற்றி
அதில் இருந்த விடீயோக்களை பார்க்கும்போது பள்ளியில் பயிலும் மாணவர்களை சித்திரவதை செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசு பள்ளியில் வேலை செய்து வரும் இவர்,
பரபரப்பு
தனது வகுப்பில் படிக்கும் ஆண் மாணவர்களின் ஆடைகளை கழற்றி துன்புறுத்தும் வீடியோ அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போதாது என்று, பாடம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரான
இவர் அப்பாவி பெண்களை தன் வலையில் சிக்கவைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார். இத்தகைய செயலில் ஈடுபட்டது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலுறவின் போது மாரடைப்பு... இறப்பால் காதலி அதிர்ச்சி!