வகுப்பறைக்கு செல்ஃபோனுடன் வந்ததால் மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை

student karnataka government school mandya physical and mental harassment
By Swetha Subash Jan 07, 2022 11:40 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

மாணவியின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியரின் செயல் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் மாண்டியா அடுத்த கனங்கூர் கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில் செல்போனை பள்ளிக்கு எடுத்து சென்றதற்காக மாணவிக்கு ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவிற்கு உட்பட்ட கனங்கூர் கிராமத்தில் இருக்கும் அந்த அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் சினேகலதா.

இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு செல்போன் எடுத்துச் சென்றிருக்கிறார்.

வகுப்பறையில் அவர் செல்போனுடன் இருந்ததை ஆசிரியை சினேகலதா பார்த்திருக்கிறார். ஆசிரியை கண்டதும் உடனே மறைத்து வைத்திருக்கிறார்.

அவரை அழைத்து செல்போன் எங்கே என்று சினேகலதா கேட்க, இல்லை என்று சொல்லவும், உடனே அவர் மாணவியை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தி இருக்கிறார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் வந்து இருந்திருக்கிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பாக நடந்த இந்த சம்பவம் தற்போது தான் வெளியே வந்திருக்கிறது.

தனது பெற்றோரிடம் இதுகுறித்து முறையிட அவர்கள் மூலமாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் செல்ல, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.