பல மணி நேரம் செல்போன் பயன்படுத்துறீங்களா? ஸ்ட்ரோக் வருமாம்..
அதிகமாக செல்போன் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பயன்பாடு
சீனாவில் உள்ள 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், தனது மொபைல் ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்தியதால், கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
பீஜிங்கில் அந்த மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நீண்ட நேரம் கழுத்தை குனிந்து வைத்திருக்கும் "டெக்ஸ்ட் நெக்" (text neck) என்ற மோசமான நிலைதான் பக்கவாதத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
கவனம் தேவை
கழுத்து வளைந்து இருப்பதால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த உறைவு உருவாகிறது. இது இறுதியில் உயிருக்கு ஆபத்தான பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. தற்போது அந்த மாணவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, இரத்த உறைவு அகற்றப்பட்டது.
உலகளவில் இறப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது. எனவே, நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இது பக்கவாதத்தை தடுப்பதோடு கண் பிரச்சனை முதுகு வலி, சோர்வு போன்ற அனைத்திலிருந்து உங்களை காக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.