கருத்துக் கணிப்பு; உச்சத்தில் பங்குச் சந்தை - என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?
இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கணிப்பு
அனைத்து கட்ட தேர்தல்களும் முடிவடைந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 3வது முறையாக ஆட்சியமைக்கும் என்ற கணிப்பு வெளியானது.
இதனையடுத்து மீண்டும் மோடி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டதாலும், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதாலும், பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் துவங்கியது. ர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 76,738.89 புள்ளிகள், நிப்டி குறியீடு 23,338.70 புள்ளிகள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.
பங்குச் சந்தை
இதனால் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர். தேர்தல் முடிவுகளின்போது பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எதில் முதலீடு செய்கிறீர்கள், எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் திட்டமிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். சந்தையில் தற்போது காணப்படும் எதிர்பார்ப்பிலும், உற்சாகத்திலும் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ளாமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து தகுதியான பங்குகளில் முதலீடு செய்வது மிகவும் நல்லது என பெரும்பாலான நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.